திருச்சுழியில் சிப்காட்டிற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு
திருச்சுழி: திருச்சுழி அருகே சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.திருச்சுழி தொகுதியில் தொழிற்சாலைகள், உணவு பூங்கா அமைக்க அரசு அறிவித்தது. இதையடுத்து திருச்சுழி பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த முடிவு செய்தது.இதில், திருச்சுழி அருகே அகத்தாகுளம், நத்தகுளம், முத்தனேரி, குழலிக்குளம், நல்லதரை, குருந்தங்குளம் உட்பட கிராம பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவை விவசாய நிலங்கள் எனவும், விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது எனவும் கிராம மக்கள் இங்கு சிப்காட் அமைக்க விலை நிலங்களை எடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.சில தினங்களுக்கு முன்பு திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமையில், சிப்காட் இந்த பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் சிவக்குமாரிடம் மனு கொடுத்தனர்.