உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே செயல்பட்டு வந்த மின்வாரிய கிளை அலுவலகத்தை சாத்தூருக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தில் மின்வாரிய கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள ஆசிலாபுரம், சோழபுரம், கிழவி குளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், குன்னக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊராட்சி சாத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதால் இதை சாத்துாருக்கு மாற்ற மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அலுவலக மாற்றத்தை நிறுத்தி வைக்க கோரி ஐந்து ஊர் பொதுமக்கள் சார்பில் மின்வாரியத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி