உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த புறநகர் பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சி உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள புறநகர் பகுதிகளை மட்டும் அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புறநகர் பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். புறநகர் பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பாதிக்கும். ஊராட்சியின் தரம் குறைந்து விடும். வருமானம் பாதிக்கப்பட்டு வளர்ச்சி பணிகளும் செய்ய முடியாமல் போய்விடும். சொத்து வரி உயரும். இதர வரி இனங்களும் கூடும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவர் இதை கருத்தில் கொண்டு புறநகர் பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க கூடாது என, மக்கள் கோரிக்கை மனுவை பி.டி.ஓ., சூரியகுமாரியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ