உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டு திட்டத்திற்கு எதிர்ப்பு

அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டு திட்டத்திற்கு எதிர்ப்பு

விருதுநகர்:அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் முடிவிற்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கப் பொதுச் செயலாளர் சுபின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலவச வார்டு, கட்டண வார்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். ஒரே மருத்துவமனையில் ஏழைக்கு ஒரு சிகிச்சை, கட்டணம் செலுத்துபவருக்கு ஒரு சிகிச்சை கிடைக்க வழிவகை செய்வதாக இருக்கும்.தமிழகத்தில் கூடுதலாக 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரே ஒரு மருத்துவரை கொண்டு 24 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருந்தாளுனர் கூட பணியில் இல்லை.மேலும் மாலை 4:00 மணிக்கு மேல் ஒரு செவிலியர், வயதான மருத்துவ பணியாளர்கள் இரவு முழுவதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பிற்காக இரவு காவலர் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் நடந்த எல்லாவற்றையும் இந்த அரசு சரிசெய்யும் என நம்பியவர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.மக்களுக்கு சிறப்பான சேவை வழங்க மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் தயாராக உள்ளனர். மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பணியாளர்களுடன் இணைந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ