வியாகுல அன்னை சர்ச் தேர் பவனி
விருதுநகர்; திருச்சுழி தும்முசின்னம்பட்டி வியாகுல அன்னை சர்ச் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.மே 3ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் தினமும் மாலை நவநாள் திருப்பலி, மறையுரை நடந்தன. நேற்று முன்தினம் மாலை கமுதி பாதிரியார் அமலன், ரோச்மா நகர் பாதிரியார் இயேசு ரட்சகர் தலைமையில் நவநாள் திருப்பலி, மறையுரை நடந்தன.அதைத் தொடர்ந்து காவல் சம்மனசு மிக்கேல் அதிதுாதர், வியாகுல அன்னையின் மின் அலங்கார தேர் பவனி நடந்தது. கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.