உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஸ்ரீவி.,யில் குவியும் வெளியூர் பக்தர்கள் ரதவீதிகளில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி

 ஸ்ரீவி.,யில் குவியும் வெளியூர் பக்தர்கள் ரதவீதிகளில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி

ஸ்ரீவில்லிபுத்துார்: பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கியுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அதிகளவில் குவிந்து வருவதால் ரத வீதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஐயப்பன் மண்டல பூஜை வழிபாட்டை முன்னிட்டு தமிழகத்தின் வட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், சபரிமலை செல்லும் வழியில் அதிகளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பள்ளி அரையாண்டு விடுமுறை துவங்கியுள்ளதால் வெளி மாவட்ட பக்தர்கள் வருகையும் அதிகாலை முதல் துவங்கி உள்ளது. இதனால் சர்ச் சந்திப்பு, என்.ஜி.ஓ. காலனி ரோடு, கோயில் மாட வீதிகளிலும் ரத வீதிகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நடந்து செல்பவர்கள் ரோட்டை கடப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆண்டாள் கோயில் வீதிகளில் நிலவும் நெருக்கடியை சீரமைக்க போக்குவரத்து போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டு, மக்கள் எளிதில் நடந்து செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டுமென உள்ளூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ