பஸ் மோதி பெயின்டர் பலி
சிவகாசி: வன்னியம்பட்டி கங்காகுளத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம் 55. பெயின்டிங் வேலை செய்யும் இவர் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே தனது டூவீலரில் வந்து ரோட்டில் ஓரமாக நின்றார். அப்போது விருதுநகர் வி.சுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த முத்துராஜ் 30, ஓட்டி வந்த தனியார் பஸ் மோதியதில் நமச்சிவாயம் இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.