உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓட்டுச்சாவடிகள் தோறும் வாட்ஸ் ஆப் குழுக்கள் நடைமுறை சிக்கலில் கட்சி நிர்வாகிகள்

ஓட்டுச்சாவடிகள் தோறும் வாட்ஸ் ஆப் குழுக்கள் நடைமுறை சிக்கலில் கட்சி நிர்வாகிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் ஓட்டுச் சாவடிகள் தோறும் வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்க தி.மு.க., அ.தி.மு.க. தலைமைகள் அறிவுறுத்தியுள்ளன. ஆனால் வாக்காளர்களின் அலைபேசி எண்களை வாங்கி குழுக்கள் அமைப்பதில் நிர்வாகிகள் திணறி வருகின்றனர். 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் ஓட்டுச்சாவடிகள் தோறும் கட்சி நிர்வாகிகள் 10 பேர் கொண்ட குழுக்களை உருவாக்கி உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜ., மட்டுமின்றி த.வெ.க., கூட பூத் கமிட்டி அமைத்து, ஆலோசனை கூட்டங் களையும் நடத்தியுள்ளனர். இளைய தலைமுறையின் ஓட்டுகளை பெறுவதற்காக தகவல் தொழில் பிரிவுகள் மூலம் சமூக வலைத்தளங்களில் கட்சியினர் பதிவுகளை தினமும் போட்டு வருகின்றனர். தி.மு.க.,வினர் அரசின் சாதனைகளையும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சார்பில் பழனிசாமி சுற்றுப்பயண பிரசார வீடியோக் களையும், இன்ஸ்டா கிராம் ரீல்ஸ்களாகவும் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை கட்சி நிர் வாகிகள் மத்தியில் மட்டுமே கொண்டு செல்லப்பட்டுள்ள இத்தகைய செயல்பாடுகளை ஒவ்வொரு ஓட்டுச்சாவடியில் உள்ள மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், குறைந்தபட்சம் 200 பேர் கொண்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைக்க கட்சிகள் அறிவுறுத்தி உள்ளன. ஆனால் கட்சி நிர் வாகிகள் வாக்காளர்களின் அலைபேசி எண்களை வாங்குவதில் சிரமத்தை சந்திக்கின்றனர். நிர்வாகி களின் உறவினர்கள் மட்டுமே தங்களின் அலைபேசி எண்களை தருகின்றனர். அரசியலில் விருப்பமில்லாத மக்கள் அலைபேசி எண்களை தர மறுக்கின்றனர். இதனால் வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்க களத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !