அன்பு நகரில் பேவர் பிளாக் பதிக்கும் பணி மும்முரம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்ததால் அன்பு நகரில் தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் 10 மாதங்களுக்கு மேலாக முதற்கட்டமாக நடந்து வருகிறது. இதில் அன்பு நகரில் உள்ள 1 முதல் 10 தெருக்களில் நடந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாயினர். தெருவில் உள்ள ரோடுகள் குண்டும் குழியுமாகவும் இருந்தன. தெருவில் நடக்க முடியவில்லை. மழைக்காலத்தில் சேறும் சகதியும் ஆகி அவதிப்பட்டனர். இந்நிலையில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்ததால் இரண்டு நாட்களாக தெருக்களில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விரைவாக கற்களை பதித்து தெருக்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.