மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்க ஆண்டு விழா
25-May-2025
விருதுநகர்: ஓய்வூதியம் பெறுவோருக்கு 70 வயது நிறைவடையும் போது 10 சதவீதமும், 80 வயது நிறைவடையும் போது மேலும் 10 சதவீதமும் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு துறை ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட அமைப்பாளர் புவனேசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மேற்கு மாவட்டத் தலைவர் அலிபாத், கிழக்கு மாவட்டத் தலைவர் உலகநாதன், மாவட்டச் செயலாளர் செல்வின், பொருளாளர் மாரிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் ஆ.பூங்கோதை, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க தலைவர் பாண்டியராஜன், மின்துறை சிதம்பரம், வேளாண்துறை சேதுராஜ், அறநிலையத்துறை மலைஅரசு பாண்டியன் பங்கேற்றனர்.
25-May-2025