உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் உடைந்து வீணாகும் குடிநீரால் மக்கள் அதிருப்தி

குழாய் உடைந்து வீணாகும் குடிநீரால் மக்கள் அதிருப்தி

சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே நான்கு விலக்கு ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ளூர் போர்வல் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக ஊராட்சி அலுவலகம் அருகே நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்றும் நிலையத்திற்கு போர்வெல் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் ஊராட்சி அலுவலகம் அருகே கன்னி சேரி செல்லும் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். எனவே உடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ