மேலும் செய்திகள்
'ரேஷன் கடை வாக்குறுதியை நிறைவேற்றுமா அரசு'
08-Apr-2025
ராஜபாளையம் ;ராஜபாளையம் தாலுகா பகுதி ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் வழங்க வேண்டிய பொருட்களை இருப்பு காரணம் கூறி திருப்பி அனுப்புவதால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். ராஜபாளையம் தாலுகாவில் நகராட்சி ,36 ஊராட்சி ,இரண்டு பேரூராட்சி என இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு 135க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்நிலையில் பகுதி வாரியாக ரேஷன் கடை பொருட்களை மாதம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் பிரித்து சப்ளை செய்வதால் வேலைக்கு செல்லும் தினக்கூலி தொழிலாளர்கள், முதியோர், பெண்கள் தங்களுக்கான பொருட்களை வாங்க முடிவது இல்லை. நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு ஒரே நேரத்தில் பொருட்கள் அனுப்பி வைப்பதில் ஏற்படும் பிரச்னைகளால் மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு அலைச்சல் காரணமாக சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக ரேஷன் பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் மக்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
08-Apr-2025