உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தண்டியனேந்தல் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்

தண்டியனேந்தல் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்

காரியாபட்டி: கிரானைட் குவாரி உரிமத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால் கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என தெரிவித்ததால், சலசலப்பு ஏற்பட்டது. காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்டியனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டம் நடத்த அதிகாரிகள் வந்தனர். அப்போது மக்கள் நிழற்குடை பின்புறம் வளர்ந்துள்ள, அரசு தடை செய்யப்ட்ட கோனோ கார்பஸ் மரத்தை அகற்ற வேண்டும். அதே பகுதியில் கிரானைட் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய தீர்மானமாக நிறைவேற்றினால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்போம் என்றனர். முதலில், கலந்து கொண்டு, வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். தீர்மானம் நிறைவேற்றாமல் கையெழுத்திட முடியாது, தீங்கு விளைவிக்கக் கூடிய மரத்தை அப்புறப்படுத்த வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து அவற்றை அப்புறப்படுத்தப்படும். குவாரி உரிமம் ரத்து செய்வது குறித்து தற்போது தீர்மானம் நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததால், கூட்டத்தை புறக்கணித்து அனைவரும் கிளம்பினர். அதிகாரிகளும் வேறு வழி இன்றி கிளம்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை