உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பந்தல்குடியில் 15 ஆண்டுகளாக ரோடு இன்றி மக்கள் அவதி

 பந்தல்குடியில் 15 ஆண்டுகளாக ரோடு இன்றி மக்கள் அவதி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் 15 ஆண்டுகளாக ரோடு இன்றி புறநகர் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பந்தல்குடி ஊராட்சி. இதில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள புறநகர் பகுதியான தெய்வா நகர் உருவாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. மெயின் ரோட்டில் இருந்து இந்த பகுதிக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் விழுந்து செல்ல வேண்டி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் ரோடு போடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் வாறுகால் கட்டி அதன் மேல் ரோடு போட வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் ரோடே போடாமல் விட்டுவிட்டது. 15 ஆண்டுகளாக ரோடு அமைக்க மக்கள் போராடி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் இந்த பகுதிக்கு ரோடு, வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ