மேலும் செய்திகள்
தாழ்வான வாறுகால், பள்ளமான ரோடு
11-Apr-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த சங்கிலி நகரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.நகர் உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் குடிநீர், வாறுகால், ரோடு, தெருவிளக்கு என எவ்வித வசதிகளும் செய்யப்படவில்லை. இங்கு சோலை சாமி தெருவில் வடக்கு பகுதி கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரோடு அமைக்காமல் வாறுகால் அமைத்துள்ளதால், கழிவுநீர் சீராக வெளியேற வழி இன்றி ரோட்டில் தேங்கியுள்ளது.இதே போன்று முத்தையா தெருவிலும் மழைநீர், கழிவுநீர் தெருவில் தேங்கி கிடப்பதால் தெருவில் நடந்து செல்வோரும் வாகனங்களில் செல்வோரும் கழிவுநீரை மிதித்து கொண்டு செல்ல வேண்டி உள்ளது. ரோடும் குண்டும், குழியுமாக இருப்பதால் டூவீலர்கள் செல்வோர் சிரமப்படுகின்றனர்.தெருக்களின் பல பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் வயதானவர்கள் வேலைக்குச் சென்று வருபவர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. ஜல் ஜீவன் திட்டம், இந்திரா குடிநீர் திட்டம், ஊராட்சி குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் வீடுகளில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை வாறுகால் போடுவதற்காக அனைத்தையும் சேதப்படுத்தி விட்டனர்.ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் தண்ணீரே வரவில்லை. கடமைக்கு குழாய்களை அமைத்துள்ளனர். பல வீடுகளில் குழாய்கள் சேதம் அடைந்து விட்டன. ஊராட்சிக்கு தேவையான வரிகள், குடிநீருக்கு டெபாசிட் உள்ள வரிகளை நாங்கள் தவறாமல் கட்டுகிறோம் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.சங்கிலி நகரில் ரோடு அமைக்காமல், வாறு கால்கள் அமைத்துள்ளதால் கழிவு நீர் சீராக வெளியேற முடியாமல் ஆங்காங்கு தெருக்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது. இதில் தான் பள்ளி மாணவர்கள் கழிவு நீரை மிதித்து நடந்து செல்ல வேண்டியுள்ளது. ரோடு அமைத்து அதன் பின் முறையாக வாறுகால் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மதுரா, குடும்பதலைவி.சங்கிலி நகரில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரும்படி கூறி போராடி வருகிறோம். வாறுகால் அமைப்பதற்காக வீடுகளில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி விட்டனர். குழாய்களுக்கு மேலே வாறுகால் அமைத்துள்ளனர். குழாய்களில் ஆங்காங்கு தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறுகிறது. இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் வாறுகாலை தோண்ட வேண்டும்.- தெய்வேந்திரன், கடைகாரர்.
11-Apr-2025