உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வசதிகளுக்கு ஏங்கும் மக்கள்

வசதிகளுக்கு ஏங்கும் மக்கள்

சாத்துார்,: சாத்துார் அருகே வீரார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் ரோடு வாறுகால் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டவீரர் பட்டி ஊராட்சியில் உள்ள காலனியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பழைய வாறுகாலில் தற்போது குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. முறையான ரோடு வசதி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்ட் ரோடுகள் பெயர்ந்து கற்கள் கால்களை பதம் பார்க்கும் வகையில் கரடு முரடாக உள்ளது. ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிக அளவில் உள்ளது.இரவில் மட்டுமின்றி பகலிலும் மக்கள் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை