மேலும் செய்திகள்
சதுரகிரியில் ஐப்பசி அமாவாசை வழிபாடு
01-Nov-2024
ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு மழையை பொருத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.இக்கோயிலில் நாளை கார்த்திகை மாத பிரதோஷம், டிச.30ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை (நவ.28) முதல் டிச. 1 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட இருந்தனர்.இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது சதுரகிரி மலையில் லேசான சாரல் மழை பெய்வதாலும், சுவாமி தரிசனம் செய்ய அந்தந்த நாட்களின் காலையில் பெய்யும் மழையை பொறுத்துதான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.
01-Nov-2024