உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வைப்பாற்றில் வளர்க்கப்படும் பன்றிகள் வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பு

வைப்பாற்றில் வளர்க்கப்படும் பன்றிகள் வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பு

சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் வளர்க்கப்படும் பன்றிகளால் ஏற்பட்டு வரும் சுகாதாரகேட்டால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். வைப்பாற்றில் படந்தால் முதல் அமீர் பாளையம் நகராட்சி மயானக் கரை வரை பல்வேறு இடங்களில் ஆற்றை ஆக்கிரமித்து பன்றிகள் வளர்க்கும் தொழில் நடந்து வருகிறது. பன்றிகள் வளர்ப்பவர்கள் அவற்றை கொட்டடியில் வைத்து கட்டி போட்டு வளர்க்காமல் ஆற்றுக்குள் திரிய விட்டு உள்ளனர். காலை மதியம் இரவு வேளைகளில் நகர்ப்பகுதியில் சேகரமாகும் உணவுகளை கொண்டு வந்து பன்றிகளுக்கு உணவாக வைத்துவிட்டு செல்கின்றனர். இந்த பன்றிகள் சாக்கடையில் மட்டுமின்றி ஆற்றில் ஓடும் நல்ல தண்ணீரிலும் உருண்டு புரளுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.பகல் முழுவதும் ஆற்றுக்குள் உலா வரும் பன்றிகள் இரவு மக்கள் நடமாட்டம் ஓய்ந்தவுடன் நகருக்குள் வந்து அலைந்து திரிகின்றன.நகரில் உள்ள வீடுகளில் முன்பு வைக்கப்பட்டுள்ள பூச்செடிகளையும் இருசக்கர வாகனங்களையும் உரசி தள்ளி சாய்த்து விடுகின்றன.பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் மூளைக்காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.எனவே ஆற்றுக்குள் ஆக்கிரமிப்பு செய்து பன்றிகள் வளர்ப்பவர்கள் அந்த பன்றிகளை பிடித்து அகற்றவும் முறையாக கொட்டடி வைத்து வளர்க்கவும் உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி