உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீ்ட்டில் 30 பவுன் நகை திருட்டு போலீஸ் தீவிர விசாரணை

வீ்ட்டில் 30 பவுன் நகை திருட்டு போலீஸ் தீவிர விசாரணை

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து பீரோவிலிருந்த 30 பவுன் நகைகளை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.காரியாபட்டி செவல்பட்டி அழகர்சாமிநகரைச் சேர்ந்த எலக்ட்ரிசியன் சுப்புராஜ். இவரது மனைவி ஆண்டாள்தேவி திருச்சுழியில் நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்கிறார். மகன் பரத்ராம் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்றுகாலை வீட்டை பூட்டி மூவரும் வெளியில் சென்றனர். மாலை 5:00 மணிக்கு கல்லூரி முடித்து வீடு திரும்பிய பரத்ராம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார். உள்ளே பார்த்தபோது பீரோ கதவு திறந்து கிடந்தது. பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் திருடு போனது தெரிந்தது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். காரியாபட்டி போலீசார் இதில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.சில நாட்களாக காரியாபட்டியில் தொடர்ந்து திருட்டு நடக்கிறது. நேற்று முன் தினம் ஒரே தெருவில் 4 அலைபேசிகள், மற்றொரு வீட்டில் ரூ. 40 ஆயிரம் மற்றும் அலைபேசி, பஸ் ஸ்டாண்டில் பயணி ஒருவர் பையில் வைத்திருந்த ரூ. 4 ஆயிரம் என திருட்டு நடந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி திருட்டை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை