உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

குழந்தையுடன் தாய் மாயம்சாத்துார்: சாத்துார் வி.சுந்தரலிங்கபுரம் சேர்ந்தவர் ஜோதி பாஸ் 36 ,இவர் மனைவி கவுசல்யா, 26. மகள் பிரியதர்ஷினி ,10. பிப்.18 ஜோதி பாஸ் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மனைவி ,குழந்தை மாயமாகி இருந்தனர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.திருட்டு: மூவர் கைது ராஜபாளையம்: ராஜபாளையம் மலயடிப்பட்டி சஞ்சீவி மலை அருகாமை குடியிருப்பை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். வீட்டில் மராமத்து பணி நடைபெறுவதால் குடும்பத்துடன் அருகில் உள்ள தெருவில் குடியிருந்தார். இந்நிலையில் வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு தங்க மூக்குத்தி, கம்ப்யூட்டர், பேட்டரி, இன்வெர்ட்டர் உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது. வடக்கு போலீசார் கண்காணிப்பு கேமராவின் மூலம் விசாரணையில் ஆவாரம் பட்டி தெருவை சேர்ந்த பால்பாண்டி 21, கம்பர் தெரு பால்பாண்டி 18, ஒத்தப்பட்டி தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி 32, என தெரிந்து கைது செய்துள்ளனர்.தடுமாறி விழுந்தவர் பலிசாத்துார்: சாத்துார் படந்தால் வசந்தம் நகரை சேர்ந்தவர் பூபதி ராஜா, 31.மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். பிப்.18ல் இரவு 10:40 மணிக்கு இவரது நண்பர் அன்புராஜ் இருவரும் நான்கு வழி சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றனர்.மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்ற பூபதி ராஜா நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் பலிசாத்துார்: சாத்துார் அருகே மண் குண்டாம் பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன், 51. இவரது தங்கை பூமதியுடன் 37,பிப்.11 இரவு 7:40மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மடத்துப்பட்டி சிவகாசி ரோட்டில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். பாலமுருகன் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி