உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் செய்திகள் விருதுநகர்

போலீஸ் செய்திகள் விருதுநகர்

மனைவியை தாக்கிய கணவர் கைதுசாத்துார்: சாத்துார் மேட்டமலையைச் சேர்ந்தவர் பாகம் பிரியா, 24. இவர் கணவர் முத்து சரவணன், 28. கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் முத்து சரவணன் பாகம் பிரியாவை கம்பால் தாக்கினார். சாத்துார் போலீசார் முத்து சரவணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.சரவெடி பறிமுதல்: ஒருவர் மீது வழக்குசாத்துார்: சாத்துார் டவுன் எஸ்.ஐ., அருண்குமார் தலைமையில் போலீசார் சின்னக்காமன்பட்டி பயணிகள் நிழற்குடைக்கு அருகே சாத்துார் வாசுதேவன், 60. சொந்தமான குடோனை சோதனை செய்தனர். குடோனில் அரசு அனுமதியின்றி ஆயிரம் வாலா, 2000 வாலா, டைகர் ஜெயண்ட் சரவெடிகள் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது. சாத்துார் போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.கஞ்சா பறிமுதல்சிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம் சசி நகரை சேர்ந்தவர் முத்துமணி 28. இவர் அம்மன் கோவில் பட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.குட்கா விற்பனை; 7 பேர் கைதுவத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் நேற்று வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட போஸ் 59, கருப்பையா 43, மருதமுத்து 74, ஜெயராமன் 51, பாசித் 40, முகமது 25, மகாலிங்கம் 45, ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மொத்தம் 40 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை