மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள் விருதுநகர்
14-Oct-2024
கஞ்சா : 4 பேர் கைதுசிவகாசி: சிவகாசி திருத்தங்கல் ஆனைக்குட்டம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் 22. இவர் பள்ளி அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல் சிவகாசி எம்.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த செல்வம் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.* விருதுநகர் வரலொட்டியைச் சேர்ந்தவர் சுபாஷ் 20. ரோசல்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் தினேஷ் 20. பராசக்தி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 19. இவர்கள் மூவரும் டூவீலரில் கே.கே.எஸ்.எஸ்.என்., நகர் அருகே 105 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். ஊரகப்போலீசார் சுபாஷ், தினேஷ் ஆகியோரை கைது செய்து, பிரேம்குமார் மீது வழக்கு பதிந்தனர்.பட்டாசு பதுக்கிய 4 பேர் கைதுவிருதுநகர்: லட்சுமிநகரைச் சேர்ந்தவர் ரகுராமன் 37. இவர் அனுமதியின்றி ஓண்டிப்புலி நாயக்கனுாரில் உள்ள ரெங்கநாயகி பட்டாசு கடை அருகே தகர செட்டில் பட்டாசுக்களை பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.* சிவகாசி லிங்கபுரம் காலனி சேர்ந்தவர் நாகராஜன் 27. இவர் பட்டாசு கடை அருகே தகர செட்டில் பட்டாசு வைத்திருந்தார். டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.* சாத்துார் சடையம்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம் ,46. மேட்ட மலையில் தகர செட்டு அமைத்து பட்டாசு தயாரித்தார். அன்பின் நகரத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம், 53. வீட்டின் முன்பு தகர செட்டு அமைத்து பட்டாசு திரி தயாரித்தார். போலீசார் இருவரிடம் இருந்து பட்டாசு ,திரியை பறிமுதல் செய்து கைது செய்தனர்.தற்கொலைராஜபாளையம்: சிவகங்கை மாவட்டம் கழுகு கடை பகுதி சேர்ந்தவர் விஜயகுமார் 30, மனைவி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து ராஜபாளையம் விடுதியில் தங்கி தனியார் அலைபேசி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Oct-2024