மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள் விருதுநகர்
14-Oct-2024
கஞ்சா பதுக்கல்; 4 பேர் கைதுவிருதுநகர்: கத்தாளம்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி 33. இவர் 20 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தார். இவரை கிழக்கு போலீசார் கைது செய்தனர். கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் தமிழரசு 24, மேலத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர்கள் 10 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தனர். இதில் தமிழரசை மேற்கு போலீசார் கைது செய்து நாகராஜ் மீது வழக்கு பதிந்தனர்.* சிவகாசி திருத்தங்கல் ஆலவூரணி அண்ணா காலனியைச் சேர்ந்த வேலுச்சாமி 26, தருண்குமார் 25, ஆகியோர் பள்ளி அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தனர். திருத்தங்கல் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வேலுச்சாமியை கைது செய்தனர். தருண்குமாரை தேடுகின்றனர்.* ராஜபாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் 24. இவர் சிவகாசி லட்சுமி நாராயணபுரம் வடக்கத்தி அம்மன் கோயில் அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பட்டாசு பறிமுதல்சிவகாசி: சிவகாசி மீனம்பட்டி வடக்கூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் 35. இவர் அதே பகுதியில் தகர செட்டில் அனுமதி இன்றி அரசால் தடை செய்யப்பட்ட சரவெடி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.* சிவகாசி முண்டகன் தெருவை சேர்ந்தவர் செண்பக விக்னேஷ் 44. இவர் விளாம்பட்டி ரோடு ஒத்த புலி விளக்கு அருகே அரசால் தடை செய்யப்பட்ட சரவெடிகளை பதுக்கி வைத்திருந்தார். மாரனேரி போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.* வெம்பக்கோட்டை அருகே துலுக்கன்குறிச்சியில் வெம்பக்கோட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி ,30 தகர செட்டில் சரவெடியை பதுக்கி வைத்து விற்பனை செய்தார். சாத்துார்இருக்கன்குடி ரோட்டில் சுடுகாட்டு பகுதியில்விஜய கரிசல் குளத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 28.சரவெடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தார். வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் குருவையா ,65. காட்டுப் பகுதியில் தகர செட்டுஅமைத்து சரவெடி பட்டாசுகளை விற்பனைக்காக வைத்திருந்தார் போலீசார் மூவரிடமிருந்து பட்டாசு பறிமுதல் செய்து கைது செய்தனர்.தந்தை, மகனுக்கு அடிசிவகாசி: சிவகாசி விஸ்வநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் வீர சடையாண்டி 44. இவரது மகள் பாலமுருகன் 20. இவருக்கும் ஆதிசங்கர் நகரை சேர்ந்த காளிராஜனுக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் காளிராஜன், வெள்ளையன், சுரேந்தர் ஆகியோர் பாலமுருகனையும் வீர சடையாண்டியையும் அடித்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Oct-2024