உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கஞ்சா பதுக்கல்; 2 வாலிபர்கள் கைதுவிருதுநகர்: கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்குமரன் 19. பாத்திமா நகரைச் சேர்ந்தவர் மரிய ஜேசுராஜ் 22. இருவரும் டூவீலரில் 650 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தனர். இருவரையும் பஜார் போலீசார் கைது செய்தனர்.சென்டர் மீடியனில் பஸ் ஏறி விபத்து ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று அதிகாலை சென்டர் மீடியனில் ஏறி, அரசு பஸ் விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்து ராஜபாளையம் சென்ற அரசு பஸ், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ராமகிருஷ்ணாபுரம், வளைவு பகுதியில் இருந்த சென்டர் மீடியனில் ஏறி நின்றது. இதில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. போக்குவரத்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பீகார் வாலிபர் தற்கொலைசிவகாசி: பீகார் ஆராவியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரேஷ் 21. இவர் சிவகாசி சுக்கிரவார்பட்டியில் உள்ள பேப்பர் மில்லில் அங்குள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார். அடிக்கடி மது அருந்தி தனிமையில் இருந்து வந்த அவர் குடியிருப்பின் அருகே உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.------வாலிபருக்கு கொலை மிரட்டல்சிவகாசி: ஏ.துலுக்கப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ் 21. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இதனை பெற்றோர் கண்டித்ததால் காதலிப்பதை நிறுத்தினார். இந்நிலையில் தினேஷ், காதலித்த பெண்ணிடம் அலைபேசியில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண்ணின் உறவினர் ஆனந்த், கலைப்பாண்டி ஆகியோர் தினேஷை தகாத வார்த்தை பேசி கம்பால் அடித்து கொலை மிரட்டல் விட்டனர்.-----இளைஞருக்கு கத்திக்குத்து; இருவர் கைதுராஜபாளையம்: ராஜபாளையம் தாட்கோ காலனியை சேர்ந்தவர் அஜித் குமார் 25, டிராக்டர் டிரைவர். இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் மதன் 23, முத்துப்பாண்டி 25, இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திய போது வாக்குவாதமாக மாறியது. இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித் குமாரை தலை மற்றும் கால் பகுதியில் குத்தி விட்டு தப்பியுள்ளனர். வடக்கு போலீசார் காயமடைந்த அஜித் குமாரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மேல் சிகிச்சைக்கு மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் மதன் த.வெ.க., நகர துணை செயலாளராக உள்ளார்.ராணுவ வீரர் பலிசாத்துார்: ஆலங்குளம் அப்பைய நாயக்கன்பட்டியை சேர்ந்தவர். கருப்பசாமி, 46. ராணுவவீரர். தற்போது டெல்லியில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து தங்கினார். காலையில் உறவினர்கள் எழுப்பும்போது எழுந்திரிக்கவில்லை. உடனடியாக சிவகாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு திரி பறிமுதல்: ஒருவர் கைதுசாத்துார்: தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன், 33.அரசு அனுமதியின்றி காட்டுப் பகுதியில் தகர செட் அமைத்து பட்டாசு திரி தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசு திரியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை