போலீஸ் செய்திகள் விருதுநகர்
கஞ்சா விற்ற மூவர் கைதுசிவகாசி: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த வீரபாண்டி 24, மணிகண்டன் 27 திருத்தங்கல் வேல்சாமி 27, ஆகியோர் திருத்தங்கல் சரஸ்வதி நகரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். திருத்தங்கல் போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.முதியவர் தற்கொலைசிவகாசி: சிவகாசி அரிசி கொள்வான் தெருவை சேர்ந்தவர் சசீந்திரன் 65. தனக்கு சொந்தமான இடத்தை விற்பதற்காக முயற்சி செய்து கொண்டுஇருந்த இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.மூதாட்டி பலிதிருத்தங்கல்: திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி 85. தனது வீட்டில் தனியாக வசித்து வந்த இவர் வீட்டிற்குள் இறந்து கிடந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபர் தற்கொலைசிவகாசி: சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஆறுமுகம் 24. லோடுமேன் வேலை பார்த்து வந்த இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மீண்டும் அவர் மது அருந்தி வந்ததால் குடும்பத்தினர் சத்தம் போட்டனர். இந்நிலையில் அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.