உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

கள் இறக்கியவர் மீது வழக்குநரிக்குடி: நரிக்குடி வீரசோழன் எஸ்.ஐ. அப்துல் காதர் தலைமையில் போலீசார் வீர ஆலங்குளத்தில் பனை தோப்பில் குடத்துடன் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் விளத்தூரை சேர்ந்த தர்மலிங்கம் 37,என்பவரின் பானையை சோதனை செய்தபோது கள் இருந்தது. கள்ளை கீழே கொட்டினர். அவர் மீது வீரசோழன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பட்டாசு பறிமுதல்: வாலிபர் கைதுசாத்துார்: சாத்துார் வி. மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார்,20. அச்சங்குளம் காட்டுப் பகுதியில் அரசு அனுமதியின்றி சோல்சா பட்டாசு தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார்பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.தற்கொலைசாத்துார்: வெம்பக்கோட்டை அருகே க. சத்திரப் பட்டியை சேர்ந்தவர் வீர அருண் பாண்டியன், 20. நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.சிகிச்சை பலனின்றி மூதாட்டி பலிசாத்துார்: சாத்துார் அமீர் பாளையத்தை சேர்ந்தவர் சந்தானம், 70. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 8:00 மணிக்கு மெயின்ரோட்டில் உள்ள மளிகைகடைக்கு சென்று விட்டு திரும்பிய போது சாத்துாரில் இருந்து வந்த சரக்கு வேன் மோதியதில் மூதாட்டி காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்இரவு 10:00 மணிக்கு பலியானார். வேன் டிரைவர் மேட்டமலை ஹரிஹரசுதனிடம் சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை