போலீஸ் செய்தி
சஸ்பெண்ட் ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு 10 பேர் மீது வழக்கு சாத்துார்: கங்கர் செவல் ராம் லட்சுமணன் பயர் ஒர்க்சில் விதிமுறை மீறி பட்டாசு தயாரித்ததால் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலையின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். டி.எஸ்.பி. நாகராஜன் உத்தரவு படி இன்ஸ்பெக்டர் கமல் தலைமையில் போலீசார் நேற்று மாலை 4:00 மணிக்கு பட்டாசு ஆலைக்கு சென்று ஆய்வில் ஈடுபட்ட போது விஜய கரிசல் குளத்தை சேர்ந்த ராமசாமி, லட்சுமணன், கணேசன், ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர். உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆலையில் மூவரும் பட்டாசு தயாரித்தது தெரிந்தது. மூலப் பொருட்களை பறிமுதல் செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். * துலுக்கன் குறிச்சி சாண்டல் பயர் ஒர்க்சில் 2020ல் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து ஆலையின் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது.நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு இன்ஸ்பெக்டர் கமல் தலைமையில் போலீசார் ஆலையில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது விஜய கரிசல் குளத்தை சேர்ந்த வினோத்குமார், மதன்குமார், செந்தமிழ், இளஞ்செழியன், மணிகண்டன், விஜயகுமார், மஞ்சுநாத் குமார், ஆகியோர் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.பட்டாசுகளை பறிமுதல் செய்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர். பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைது சாத்துார்: விஜயகரிசல் குளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் 40. இவர் வீட்டு மாடியில் அரசு அனுமதியின்றி சரவெடிகள் தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் இவரது வீட்டிலிருந்து சரவெடிகளையும் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். டூவீலர் மரத்தில் மோதி வாலிபர் பலி விருதுநகர்: விருதுநகர் அருகே நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் விக்ரம் 23. இவர் தனது சகோதரருடன் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அலைபேசி விற்பனை, சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரும், நண்பரும் இரு வேறு டூவீலர்களில் நேற்று காலை 8:30 மணிக்கு செங்குன்றாபுரம் ரோட்டில் சென்றனர். அப்போது விக்ரம் ஓட்டிச் சென்ற டூவீலர் (ஹெல்மட் அணியவில்லை) ரோடு ஓரத்தில் கிடந்த கல் தட்டி நிலை தடுமாறி புளியமரத்தில் மோதியதில் சம்பவயிடத்திலேயே தலையில் அடிபட்டு பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.