உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் செய்திகள் விருதுநகர்

போலீஸ் செய்திகள் விருதுநகர்

கஞ்சா: இருவர் கைது சிவகாசி: சிவகாசி கட்டளை பட்டி ரோடு அய்யப்பன் காலனியைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் 24, இவர் அதே பகுதி கருமன் கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்தார். மாரனேரி போலீசார் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் விஸ்வநத்தம் சுப்ரீம் நகரைச் சேர்ந்த செண்பகராஜ் 25, சிவகாசி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து ஒரு கிலோ 935 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். லோடுமேன் பலி சிவகாசி: சிவகாசி மருது பாண்டியர் மடத்து தெருவை சேர்ந்தவர் ஜோதி பாஸ்கர் 58. லோடுமேன் வேலை பார்த்து வந்த இவர் நேரு காலனியில் ஆப்செட்டில் கட்டிங் இயந்திரத்தை லாரியில் ஏற்றுவதற்காக துாக்கி வரும் போது இயந்திரம் நழுவி அவர் மீதே விழுந்தது. காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை