உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

இளம் பெண் தற்கொலை சிவகாசி எம்.புதுப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி முத்துலட்சுமி 26. இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்தது. தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் போலீசில் புகார் செய்யப்பட்டு சமாதானம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் செப். 21 ல் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறப்பட்டு வீட்டிற்கு திரும்பினார். அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்படவே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். ----- பட்டாசு பதுக்கியவர்கள் கைது சிவகாசி கிளியம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 42. இவர் ஆஸ்பெஸ்டாஸ் செட்டில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து தனக்கு சொந்தமான ஆஸ்பெஸ்டாஸ் செட்டில் அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். இருவரையும் மாரனேரி போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். சிவகாசி நாரணாபுரம் புதுார் ரோடு அம்மன் நகரை சேர்ந்தவர் மகாலிங்க மூர்த்தி 41. இவர் அழகர் நகரில் அனுமதி இன்றி பட்டாசு தயார் செய்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகள், சல்பர், வெடி உப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ----- வாலிபர் பலி சிவகாசி அரசு மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்திற்கு வாலிபர் வலிப்பு வந்து மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை