போலீஸ் செய்தி
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை அன்பின் நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் , இவர் மகள் ஜஸ்டின் திரவியம், இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து அரசு அனுமதி இன்றி பட்டாசு திரி தயாரித்தனர். போலீசார் பட்டாசு திரி மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.