போலீஸ் செய்தி
டூவீலர் மோதி ஒருவர் பலி சாத்துார்: சாத்துார் புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் குருசாமி 43. நேற்று முன்தினம் மாலை 5:50 மணிக்கு ஏழாயிரம் பண்ணை - சிவசங்கு பட்டி ரோட்டில் நடந்து சென்ற போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் காயமடைந்த அவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர். வாலிபர் மீது போக்சோ வழக்கு சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சுந்தரவேல் என்ற கண்ணன் 42. அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மீது சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர். சிறுமி மாயம் சாத்துார்: வெம்பக்கோட்டை துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் கண்டியார் 39. இவரின் 3வது மகள் 17 வயது சிறுமி நவ.1 வீட்டில் இருந்தவர் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். டீ மாஸ்டர் தற்கொலை சிவகாசி: உசேன் காலனியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் 46. டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த இவர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். --- இளம் பெண் தற்கொலை சிவகாசி : காத்தநாடார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணப்பிரியா 26. இவரும் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுபின் 28, என்பவரும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். தற்போது ஆறு மாதமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணப்பிரியா கடன் தொல்லையால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.