உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

சுற்றுலா பஸ் -- லாரி மோதல்; இருவர் காயம் அருப்புக்கோட்டை: திருச்செந்துாரில் இருந்து பாண்டிச்சேரியைச் சேர்ந்த பயணிகள் சுற்றுலா பஸ் நேற்று மதியம் 1:00 மணிக்கு அருப்புக்கோட்டை வழியாக மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அருப்புக்கோட்டை மதுரை -- துாத்துக்குடி நான்கு வழிச்சாலை கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் பேரிகார்டில் மோதி ரோடு ஓரம் நின்று கொண்டிருந்த லாரி, அதன் அருகில் நின்று கொண்டிருந்த டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலரை ஓட்டி வந்த கமுதி நீராவியை சேர்ந்த சேகர் 52, சுற்றுலா பஸ்ஸில் பயணம் செய்த புகழேந்தி 31, இருவரும் படுகாயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அருப்புகோட்டை தாலுகா போலீசார் பஸ் டிரைவர் ஐயப்பன் 25,ஐ விசாரிக்கின்றனர். பெண் உடல் மீட்பு சாத்துார்:- சாத்துார் உப்பத்துார் அருகே காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சாத்துார் தாலுகா போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ