உள்ளூர் செய்திகள்

 போலீஸ் செய்தி

வங்கியில் போலி நகை மூலம் மோசடி ஒருவர் கைது: 4 பெண்கள் மீது வழக்கு சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி யில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் போலி நகை மூலம் ரூ.15.94 லட்சம் மோசடி செய்த நான்கு பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வங்கியில் நகையை திருப்பக் கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வங்கியில் நகை அடகு வைத்து பெற்ற ரூபாய் 15 லட்சத்து 94 ஆயிரம் பணம் செலுத்தவில்லை. இவ்வங்கி மேலாளர் சுப்புலட்சுமி, 2024 ஆக.13, 14ல் நகை தரம் பரிசோதனை செய்த போது அடகு வைத்திருந்த சில நகைகள் போலியாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோசடி செய்த தாயில்பட்டி கீழக்கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த பாண்டி,பெருமாளம்மாள்,ஈஸ்வரி, ராணி, விஜயகரிசல்குளம் சூரியகலா, ஆகியோர் மீது சாத்துார் ஜே. எம் 2 நீதிமன்ற உத்தரவுப்படி வெம்பக்கோட்டை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்தனர். இதில் பாண்டியை கைது செய்து மற்ற 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர். சிறுமி மாயம் சாத்துார்: சாத்துார் அருகேயுள்ள வெங்கடாசல புரத்தை சேர்ந்தவர், சின்னம்மாள் இவர் மகள் 16 வயது சிறுமி, நேற்று முன் தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். 236 கிலோ போதை பாக்கு பறிமுதல் ராஜபாளையம்: ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே செக் போஸ்ட் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்ட போது காரில் இருந்து இருவர் தப்பி ஓடினர். சோதனை செய்ததில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 236 கிலோ போதை பாக்குகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. தப்பி யோடிய தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ் 30, கிருஷ்ணகிரியை சேர்ந்த சீனிவாசன் 40, இருவரையும் தேடி வருகின்றனர். கஞ்சா பறிமுதல்: முதியவர் கைது ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே கேட் அருகே தெற்கு போலீசார் சோதனை செய்ததில் மதுரை மாவட்டம் கம்மாளப்பட்டியை சேர்ந்த ஜெயம் 64, விற்பனைக்காக கஞ்சா 1 கிலோ 100 கிராம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கஞ்சாவை கைப்பற்றி கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை