உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் வாகனங்கள் ஏலம்

போலீஸ் வாகனங்கள் ஏலம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்ராஜபாளையத்தில் உள்ள தமிழக சிறப்பு காவல்படை 11ம் அணியில் கழிவு செய்யப்பட்ட 25 ஓடாத வாகனங்கள் 'ஸ்க்ராப்' செய்வதற்காக ஜூலை 7 காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை அணியின் வாகனப்பிரிவு மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் ஏலம் நடைபெறும் நாள் வரை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஆதார், பான் கார்டு நகலுடன் வைப்புத் தொகை ரூ.5 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி., சேர்த்து முழு தொகையினை ஏல நாள் அன்றே செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை