மேலும் செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
6 hour(s) ago
நரிக்குடி : நரிக்குடி, வீரசோழன், கட்டனுார், அ.முக்குளம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், ஊராட்சி அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் ஸ்டாண்ட் என 89 இடங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் யசோதா மணி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அஜித்குமார் முன்னிலை வகித்தார். காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்த, இம்முகாமில் 4500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகு சுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
6 hour(s) ago