உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழியில் மழைக்கு இடிந்து விழுந்த அரசு மகளிர் விடுதியின் போர்டிகோ

திருச்சுழியில் மழைக்கு இடிந்து விழுந்த அரசு மகளிர் விடுதியின் போர்டிகோ

திருச்சுழி: திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டியில் அரசு பெண்கள் சமூக நீதி விடுதியின் போர்டிகோ நேற்று பெய்த மழைக்கு இடிந்து விழுந்தது. எம். ரெட்டியபட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரில் அரசு மாணவிகள் விடுதி கட்டி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதில் 39 பேர் தங்கி படித்து வருகின்றனர். ஏற்கனவே கட்டடம் மோசமாக இருந்த நிலையில், நேற்று தொடர் மழை பெய்தது. இதில் காலை 10:00 மணிக்கு கட்டடத்தின் முன் பகுதியில் உள்ள போர்டிகோ இடிந்து விழுந்தது. மாணவிகள் பள்ளிக்குச் சென்று விட்டதால் எந்தவித அசம்பா விதமும் நிகழவில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜான்சன், அருப்புக்கோட்டை தாசில்தார் செந்தில்வேல் ஆகியோர் கட்டடத்தை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை