உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள்

தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள்

சிவகாசி : சிவகாசி கிழக்கு மயான சாலை ஞானகிரி ரோட்டில் தாழ்வாகச் செல்லும் மின் வயர்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி கிழக்கு மயான சாலை ஞானகிரி ரோட்டில் பட்டாசு கடைகள், அச்சகங்கள், உள்ளிட்ட ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால் இங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கு மூலப் பொருட்கள் கொண்டு வருவதற்கும் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்வதற்கும் அதிக அளவிலான கனரக வாகனங்கள் வருகின்றன.இந்நிலையில் இப்பகுதியில் உள்ள அனைத்து மின் வயர்களுமே மிகவும் தாழ்வாக செல்கிறது. சிறிய வாகனங்கள் எளிதில் செல்ல முடியும். ஆனால் உயரமான கனரக வாகனங்கள் மின்வயரில் உரசும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் பெரிய வாகனங்கள் வரும்போது விபரீதம் என தெரிந்தும் மரக்கட்டையால் மின் வயரை துாக்கிப் பிடித்து வாகனங்கள் வருவதற்கு வழி செய்கின்றனர். சில நேரங்களில் கனரக வாகனங்களில் பொருட்களை ஏற்றும் போதோ, இறக்கும்போதோ வயரில் உரசி விடும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள அனைத்து மின் வயர்களையும் உயர்த்தி கட்ட வேண்டும் என இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி