மேலும் செய்திகள்
கலசலிங்கம் பல்கலையில் மாணவர் குழு துவக்கம்
11-Nov-2024
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையின் இ.சி.இ. துறை இறுதியாண்டு மாணவர்கள் முகமது அன்வர், ஆகாஷ் சாம் ஜெயசீலன், ஈஸ்வரன், கோகுல், துரைராஜா ஆகியோர் இயக்குனர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சூரிய சக்தியால் இயங்கும் குரல் கட்டுப்பாட்டு இன்டக்சன் ஸ்டவ் அடுப்பை தயாரித்தனர்.இதனை பல்கலை துணை தலைவர் சசி ஆனந்த் முன்னிலையில் இயக்கி காண்பித்தனர். ரு.1 லட்சத்து 20 ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்டவ் தயாரிப்பதற்கான நிதி உதவியை யுனிவர்சிட்டி ஆப் லண்டன் வழங்கியது.சாதனை மாணவர்களையும், இயக்குனர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, அலுவலர் ஜெயக்குமார் ஆகியோரை வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் அறிவழகி, துணைத்தலைவர் சசியானந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்.
11-Nov-2024