உள்ளூர் செய்திகள்

 பாராட்டு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலர்கள் சங்கரநாராயணன், டாக்டர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., விக்னேஷ்பேசினார். அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ஜமுனா ராணி, ஆறுமுகம், வெள்ளைச்சாமி, சிவக்குமார், விவேகானந்தன், சரஸ்வதி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !