உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்; மார்ச்.31 வரை அவகாசம் நீட்டிப்பு

பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்; மார்ச்.31 வரை அவகாசம் நீட்டிப்பு

விருதுநகர்; பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம், வேலை வாய்ப்பு பயிற்சி, நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் திட்டத்தில் தொழிலக பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் இன்டர்ஷிப் திட்டத்தின் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் 14, 889 நபர்களுக்கு முன்னணி தொழிற் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொழில் நெறி வழிகாட்டு மையம், சூலக்கரை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் அரசு வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.நேரடியாக விண்ணப்பிக்க https://pminternship.mcg.gov.in/ என்ற இணையத்தையும், நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் திட்டத்தில் சேர விரும்புவோர் https://candidate.tnskill.tn.gov.inவிண்ணப்பிக்கலாம். இத்திட்டங்களில் விண்ணப்பிக்க மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு செய்து மாவட்ட நிர்வாம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை