உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மம்சாபுரத்தை புறக்கணிக்கும் தனியார் பஸ்கள் ஆட்டோக்களில் மீண்டும் ஆபத்து பயணம்

மம்சாபுரத்தை புறக்கணிக்கும் தனியார் பஸ்கள் ஆட்டோக்களில் மீண்டும் ஆபத்து பயணம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரம் வழியாக இயங்க வேண்டிய தனியார் பஸ்கள் வராமல் செல்வதால் அப்பகுதி மக்கள் உயிரை பணயம் வைத்து ஆட்டோக்களில் பயணிக்கும் நிலை மீண்டும் உருவாகி உள்ளது. சில மாதங்களுக்கு 4 உயிர்கள் பலியான பின்பும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் மக்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மம்சாபுரத்தில் இருந்து தினமும் பல ஏராளமானோர் ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, ராஜபாளையம் நகரங்களுக்கு அதிகளவில் பயணித்து வருகின்றனர்.மம்சாபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்துாருக்கு காலை 7:30 மணி முதல் 10:00 மணி வரை போதிய அளவிற்கு அரசு டவுன் பஸ்கள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஆட்டோ , மினி பஸ்களில் பயணித்து வருகின்றனர்.செப்டம்பர் மாதம் மினி பஸ் கவிழ்ந்து நான்கு பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால், தற்போது காலையில் ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு 7:00 மணிக்கு மம்சாபுரம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சாத்தூர் செல்லும் தனியார் பஸ் தற்போது நேர்வழியில் செல்கிறது.இதனால் மம்சாபுரத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு, ஆட்டோக்கள் அதிவேகத்தில் வருகிறது. இதனை மம்சாபுரம் போலீசார் நேரடியாக பார்த்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.பொன்னாங்கண்ணி கண்மாய் கரையில் ரோடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில் ஆட்டோக்கள் அதிவேகத்தில் வருவது விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதேபோல் கோட்டைப்பட்டி கண்மாய் கரை ரோடும் போதிய அகலம் இல்லாமல் மினிபஸ்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, மம்சாபுரம் வழியாக இயங்க வேண்டிய அனைத்து தனியார் பஸ்களும் முறையாக இயங்குவதையும், 15 நிமிடத்திற்கு ஒரு அரசு டவுன் பஸ், ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் ராஜபாளையத்திற்கு இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மம்சாபுரம் மக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி