உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருமுக்குளத்தில் குறையும் தண்ணீர் தெப்பத் திருவிழா நடத்துவதில் சிக்கல்

திருமுக்குளத்தில் குறையும் தண்ணீர் தெப்பத் திருவிழா நடத்துவதில் சிக்கல்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில் நீர்மட்டம் குறைந்து வருவதால் மாசி தெப்ப திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2015ல் பெய்த மழையில் திருமுக்குளம் நிரம்பியதால் 2016ல் தெப்ப திருவிழா நடந்தது. அதன் பின்பு போதிய மழை பெய்யாததால் 8 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடத்தப்படவில்லை. 2023 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையில் திருமுக்குளம் நிரம்பியதால் 2024 பிப். 24, 25, 26 தேதிகளில் தெப்பத்திருவிழா 3 நாட்கள் நடந்தது.தற்போது திருமுக்குளத்தில் தண்ணீர் அளவு சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் தெப்பத் திருவிழா நடத்த பக்தர்கள் எதிர்பார்த்தனர். நேற்று கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், குளத்தில் தண்ணீர் மட்டத்தின் அளவு குறித்து ஆய்வு செய்தார். அப்போது கடந்த ஆண்டை விட, தற்போது 3 அடிக்கும் மேலாக தண்ணீர் மட்டம் குறைந்து இருப்பது தெரிய வந்தது.மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எதிர் வரும் நாட்களில் குளத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடுமென்பதால் தெப்பத்தேர் தண்ணீரில் மிதப்பது சிரமம். தரை தட்டி நின்றுவிடும் சூழல் உள்ளதால் இந்த இந்த ஆண்டு தெப்பத் தேர் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி