உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பேராசிரியர்கள் போராட்டம்

 பேராசிரியர்கள் போராட்டம்

சாத்துார்: அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க கோரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்தும் அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரிபேராசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மூட்டாகி கிளை ஒருங்கிணைப்பாளர்கள் பிருந்தா உமா மகேஸ்வரி, காளிராஜ் , ராமானுஜம், ரவிச்சந்திரன்,சரவணகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் 52 பேராசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். *ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி பேராசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை