உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீரிழிவு நோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை; விருதுநகர் அரசு மருத்துவமனையில் வழங்கல்

நீரிழிவு நோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை; விருதுநகர் அரசு மருத்துவமனையில் வழங்கல்

விருதுநகர்; நீரிழிவு நோயாளிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள், எலி மருந்து உட்கொண்டு கல்லீரல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்பில் வெளியிடப்பட்ட மானியக்கோரிக்கை அறிவிப்பின் படி பொது சிகிச்சைப் பிரிவில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் தினசரி 25 பேருக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளான பால் 150 மிலி, வேகவைத்த முட்டை 2, சுண்டல் 50 கிராம், சோடியம், பொட்டாசியம்குறைவான பன்கள் 3 ஆகியவை வழங்கப்படுகிறது.மேலும் எலி மருந்து உட்கொண்டு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படுபவர்களின் ரத்தத்தின் பிளாஸ்மா மாற்றுவதற்கான இயந்திரம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையால் சராசரியாக மாதத்திற்கு 5 முதல் 10 நோயாளிகள் பயன் அடைவார்கள் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ