உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட மக்கள்

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட மக்கள்

விருதுநகர்; விருதுநகர் நகராட்சியுடன் சிவஞானபுரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னமூப்பன்பட்டி மக்கள் எம்.எல்.ஏ., சீனிவாசனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியின் அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, கோட்டைப்பட்டி, குமாரசாமிராஜா நகர், ரோசல்பட்டி ஊராட்சியில் ரோசல்பட்டி, குமாரபுரம், ரெங்கநாதபுரம், சிவஞானபுரம் ஊராட்சியில் சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, லட்சுமி நகர், பாவாலி ஊராட்சியில் அய்யனார் நகர், கலைஞர் நகர், பராசக்தி நகர், முத்துராமலிங்க நகர் பகுதிகளையும் இணைக்க நகராட்சி நிர்வாக ஆணையர் ஒப்புதலுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.இதையடுத்து சிவஞானபுரம் ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னமூப்பன்பட்டி கிராம மக்கள் நேற்று காலையில் விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின் மக்களிடம்எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனுவை பெற்று, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை