உள்ளூர் செய்திகள்

உதவிகள் வழங்கல்

ராஜபாளையம் ராஜபாளையம் தொகுதியில் உள்ள துாய்மை பணியாளர்களுக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., தனது ஊதியத்தில் நல திட்ட உதவி வழங்கினார். ராஜபாளையம் தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது ஊதியத்தில் தொகுதியில் உள்ள 1011 துாய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை இனிப்புகளை வழங்கினார். நகரச் செயலாளர்கள் மணிகண்ட ராஜா, ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி தி.மு.க., செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவி, நகராட்சி துணைத் தலைவர் கல்பனா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !