உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்வி உதவித்தொகை வழங்கல்

கல்வி உதவித்தொகை வழங்கல்

ராஜபாளையம்: ராம்கோ குரூப் நுாற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் நுாற்றாண்டு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நுாற்பாலை பிரிவு தலைவர் மோகன ரெங்கன் தொடங்கி வைத்து ரூ.46 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கினார். 2001 தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி பொது மேலாளர் (மனித வளம்) சண்முகராஜ், தலைமை பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி செய்திருந்தனர். ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பாக விஜயன், எச்.எம்.எஸ்., என். கண்ணன், ஐ.என்.டி.யு.சி ஆர். கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !