மேலும் செய்திகள்
அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பகிர்வு விழா
23-Dec-2024
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இதய சர்ச்சில் செயல்பட்டு வரும் புனித வின்சென்ட் பவுல் சபையின் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாவினை முன்னிட்டு ஜீவக்கல் அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்கள், ஆதரவற்றோருக்கு உணவு, கிறிஸ்மஸ் கேக்குகள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய சபையின் செயலாளர் பரலோகம், கிளை சபை தலைவர் புனிதன், செயலாளர் ராணி, பொருளாளர் மைக்கேல் பீட்டர், முன்னாள் தலைவர் ராஜன் அந்தோணி ராஜ், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.* சி.எஸ்.ஐ. தூய தோமா சர்ச்சில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சபை குரு பால் தினகரன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு இறையியல் கல்லூரி பேராசிரியர் குருஸ் துரை முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழாவில் திருச்சபை நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.
23-Dec-2024