உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புரட்டாசி நான்காம் சனி வழிபாடு

புரட்டாசி நான்காம் சனி வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி நான்காம் சனி உற்ஸவத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 2:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப பூஜை நடந்தது. பின்னர் ராஜா அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 4:00 மணிக்கு சீனிவாச பெருமாள் கிரிவலம், கருட பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். செண்பகத்தோப்பு காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோயில், ஆண்டாள் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ