உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கொள்முதல் ரூ.20 விற்பனை ரூ.80

கொள்முதல் ரூ.20 விற்பனை ரூ.80

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி மா விளைச்சல் அதிகம் உள்ள இடங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் ரூ.20 பெற்று ரூ.80 வரை விற்று அதிக லாபம் பெறுபவர்களால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய சேத்துார், தேவதானம், ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம், வத்திராயிருப்பு, கான்சாபுரம் உள்ளிட்ட ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 3259 ஹெக்டேரில் மா உற்பத்தி நடைபெறுகிறது. இப்பகுதியில் விளையும் சப்பட்டை, பஞ்சவர்ணம் போன்ற அதிகம் விளையும் ரகங்களுடன் பாலாமணி, இமாம் பசந்த் போன்ற ரகங்களுக்கு கேரள மாநில வியாபாரிகள் இடையே அதிக வரவேற்பு உண்டு. இங்கு விளையும் மாங்காய்களுக்கு முக்கிய சந்தையாக உள்ள ராஜபாளையத்தில் மா விளைச்சல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில்அதிக வரத்து கேரள மாநில மழை காரணமாக வெளியே அனுப்புவது தேக்கத்தால் மா விவசாயிகளிடம் அறுவடை மாங்காயை கொள்முதல் செய்ய சிக்கல் ஏற்பட்டுள்ளது.தற்போதும் கிலோ ரூ.20 க்கு பெற்று வியாபாரிகள் மூலம் சந்தையில் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இது குறித்து விவசாயி தினேஷ் சங்கர்: மா விவசாயத்தில் தற்போது அடர் நடவு பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகின்ற நிலையில் குத்தகை தொகை, தொழிலாளர் கூலி, மருந்து செலவு அதிகரித்த நிலையில் தகுந்த விலை கிடைப்பதில்லை. கேரள மாநில வியாபாரிகளின் வருகை குறைவால் சந்தைக்கு மாங்காய் குவிந்து நிலையில் ரூ.20 வரை கேட்பு உள்ளது. ஆனால் சந்தையில் ரூ.80 வரை விற்று வருவதால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. அரசு இதை கண்காணித்து மா விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை